நைபிடாவ்: மியான்மர் நாட்டில் கடந்த 28ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல், அண்டை நாடான தாய்லாந்திலும் கடந்த 28ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,003 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், தாய்லாந்தில் நிலநடுக்கத்தில் மாயமான 100க்கும் அதிகமானோரை தேடும் பணி நடந்து வருகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் தலைநகர் நேபிடாவில் இன்று நள்ளிரவில் நடந்த மீட்பு பணியின்போத 26 வயதான இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, மீட்புப்பணியின் 4வது நாளான நேற்று கட்டிட இடிபாடுகளுக்கு சிக்கிய 63 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது appeared first on Dinakaran.