மியான்மருக்கு 405 டன் அரிசி கப்பலில் அனுப்பியது இந்தியா

2 days ago 4

புதுடெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 405 டன் அரிசி உள்ளிட்ட பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது. கடந்த வாரம் மியான்மரில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3,354 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டுக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை இந்தியா அனுப்பியுள்ளது. மியான்மருக்கு உதவும் வகையில் ஆபரேஷன் பிரம்மா திட்டத்தின் கீழ் மாண்ட்லேயில் இந்திய ராணுவத்தின் தற்காலிக தள மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 442 டன் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய கடற்படை கப்பலான ஐஎன்ஸ் கரியால் யாங்கூனுக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தது. நிவாரண பொருட்களை யாங்கூன் முதல்வர் யு சோ தெயினிடம் இந்திய தூதர் அபய் தாக்குர் ஒப்படைத்தார் என்றார். மேலும் நேற்று 31 டன் நிவாரண பொருட்களை ஏற்றி கொண்டு விமான படை விமானம் நேற்று மாண்ட்லேவுக்கு சென்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post மியான்மருக்கு 405 டன் அரிசி கப்பலில் அனுப்பியது இந்தியா appeared first on Dinakaran.

Read Entire Article