மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவு

1 day ago 3

மியான்மரில் காலை 7.54 மணிக்கு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவானது.

மியான்மரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மியான்மரின் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்கள் பலத்த சேதமடைந்தது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,700ஐ கடந்தது.பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை 7.54 மணிக்கு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

The post மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article