சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மின்சார வாரியத்தில், சுமார் 39 ஆயிரம் களப்பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள், கடந்த 2ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. தற்காலிகப் பணியாளர்களை வைத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது மின்சார வாரியம். கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், மின்சாரப் பராமரிப்பு தொடர்பான பணிகள் அதிகரிக்கும். பணி நியமனம் மேற்கொள்ளவில்லையென்றால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும். இவ்வாறு கூறியுள்ளார்.
The post மின்வாரிய காலி பணியிடத்தை நிரப்ப அண்ணாமலை வலியுறுத்தல் appeared first on Dinakaran.