தேனி, ஏப். 4: தேனி மாவட்டத்தில், தேனி, பெரியகுளம், சின்னமனூரில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் நாளை (5ம்தேதி) சிறப்பு குறைதீர் முகாம் நடக்க உள்ளது. தேனி மின்பகிர்மான வட்டத்தில் மின் கட்டண பிரச்னைகள், பழுதான மீட்டர்களை மாற்றுதல், குறைந்த மின்னழுத்த புகார்கள் மற்றும் அதன் தொடர்புடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தேனி, பெரியகுளம், சின்னமனூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் நாளை (5ம்தேதி) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாம்களின்போது, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு 3 தினங்களுக்குள்ளும் மற்றும் குறைந்த மின்னழுத்த புகார்களுக்கு தீர்வுகளை ஒரு மாதத்திற்குள்ளும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேனி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
The post மின்வாரிய அலுவலகங்களில் நாளை சிறப்பு குறைதீர் முகாம் appeared first on Dinakaran.