மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி நடனம்.. மின் கம்பம் மோதி தூக்கி வீசப்பட்ட மாணவன்..

6 months ago 41
சென்னையில் மின்சார ரயிலின் படிக்கட்டில் வெளியே தொங்கிக் கொண்டு நடனம் ஆடிய மாணவன், மின் கம்பம் மோதி தூக்கி வீசப்பட்ட நிலையில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் மாதவரத்தைச் சேர்ந்த மாணவன், கடந்த 9ம் தேதி கல்லூரியில் இருந்து நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது ராயபுரத்திற்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையே சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். பேருந்திலோ, ரயிலிலோ, படிக்கட்டு பயணம் எப்போதும் ஆபத்து நிறைந்தது. படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
Read Entire Article