மின்கம்பத்தின் மீது மோதி கார் சேதம்

1 week ago 3

 

காரமடை: காரமடையை அடுத்துள்ள தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (32). இவர் எலக்ட்ரிகல் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை காரணமாக தனது காரில் கோவை சென்றார். பணி முடித்து நேற்று அதிகாலை மீண்டும் காரமடை வழியாக ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கார் தோலம்பாளையம் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் பிரவீன் உயிர் தப்பினார். இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் பிரவீன் அதிகாலை வேளையில் காரை ஓட்டியதால் கண்ணயர்ந்ததால் விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

The post மின்கம்பத்தின் மீது மோதி கார் சேதம் appeared first on Dinakaran.

Read Entire Article