மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

3 months ago 21

 

பூந்தமல்லி, செப்.30: ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பவன். இவரது நண்பர் வெளிநாட்டில் இருந்து நேற்று காலை விமான மூலம் சென்னை வந்தார். அவரை அழைத்துச் செல்வதற்காக, பவன் தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் விமான நிலையத்திலிருந்து தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி காரில் 5 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், டிரங்க் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த இடத்தில் தடுப்புகள் இருந்தபோது, அதை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதை பார்த்த சக வாகன ஓட்டிகள், உடனடியாக காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

இதில் யாருக்கும் எந்தவித காயமும் இன்றி 5 பேரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் கார் பலத்த சேதமடைந்தது. தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரை, கிரேன் உதவியுடன் மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

The post மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Read Entire Article