மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற கோரிக்கை

2 months ago 11

ராமேஸ்வரம், டிச.9: மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சீரான மின்சாரம் கிடைக்காமல் ஒரு சில தெருக்களில் அதிக மின் அழுத்தமும், சில பகுதிகளில் குறைவான மின் அழுத்தமும் உள்ளது. மின்வாரியம் இதனை சரி செய்ய அடிக்கடி பராமரிப்பு பணிகள் மூலம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தற்போது மழை காலம் என்பதால் செடிகள் கொடியாக வளர்ந்து பெரும்பாலான மின்கம்பங்களில் படர்ந்து கிடக்கிறது.

தெருக்கள், தோப்பு பகுதி, நெடுஞ்சாலை ஓரம் என பல பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் செல்லும் மெயின் லயனில் செடி கொடியாக படர்ந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சீரான மின்சாரம் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இவ்வாறு உள்ள மின்கம்பங்களால் மின் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுபோன்று மின்கம்பங்களில் படர்ந்து கிடக்கும் செடி கொடிகளை மின்வாரியம் உடனடியாக அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article