சென்னை: பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இதுவரை 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தந்தை பெரியார் பேசியதாக சில சொற்களை கூறினார். தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுளன. கடலூர், சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர். சீமான் மீது தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்து புகார்கள் குவிந்து வருவதால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
The post பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக சீமான் மீது இதுவரை 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.