விழுப்புரம்: அரசு போக்குவரத்துக் கழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் மின் கட்டணம் போல பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: மூடப்பட்டது 500 மதுக் கடைகளாக இருந்தாலும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 600 மன மகிழ் மன்றங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. எஃப்எல் 2 என்ற பெயரில் அரசின் உரிமம் பெற்றால் யார் வேண்டுமென்றாலும் மது விற்பனை செய்யலாம். இதற்கு திமுக அரசு பல சலுகைகள் வழங்குகிறது. மனமகிழ் மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விநியோகிக்க வேண்டும் என்ற விதி தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.