மினி வேன் டயர் வெடித்து சாலையில் கொட்டிய மீன்கள் - அள்ளி சென்ற பொதுமக்கள்

2 hours ago 2

வேலூர்,

விஜயவாடாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 2 டன் மீன்களை மினி வேன் ஒன்று ஏற்றி சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வேனின் டயர் வெடித்தது. இதில் ஏற்பட்ட அதிர்வால் வேனில் இருந்த 2 டன் மீன்கள் சாலையில் கொட்டியது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து தங்களால் முடிந்த அளவிற்கு மீன்களை அள்ளி சென்றனர். இந்த விபத்தில் டிரைவர் சிறு காயங்களில் உயிர் தப்பினார். தகவலறிந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article