சாம்பியன்ஸ் டிராபி: ஆஸ்திரேலிய அணியிலிருந்து கம்மின்ஸ், ஹேசில்வுட் விலகல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

3 hours ago 1

சிட்னி,

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் இந்திய அணிக்குரிய அனைத்து ஆட்டங்கள் மற்றும் முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளது. மற்ற ஆட்டங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டி நடைபெறும் இடம் இந்திய அணி தகுதி பெறுவதை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கம்மின்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கணுக்கால் காயம் காரணமாக கம்மின்ஸ் பங்கேற்பதில் சிக்கல் நிலவியது. அதேபோல் மற்றொரு முன்னணி வீரரான ஜோஷ் ஹெசில்வுட்டும் விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக களமிறங்குவது கடினம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து கம்மின்ஸ், ஹேசில்வுட் இருவரும் விலகியுள்ளனர். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது ஆஸ்திரேலிய அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை கண்டறியும் பணியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. மேலும் கேப்டன் பதவிக்கு ஸ்டீவ் சுமித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரில் ஒருவரை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Read Entire Article