தேவையானவை:
நறுக்கிய கேரட்,
பீன்ஸ், கத்தரிக்காய் – தலா கால் கப்,
நறுக்கிய பாகற்காய் – 2 டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சை பழம் – 4,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 15,
வினிகர் – கால் கப்,
கடுகு எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். நறுக்கிய காய்கறிகளுடன் இந்தப் பொடியை சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு குலுக்கி கலந்து கொள்ளவும். பிறகு வினிகரையும், எலுமிச்சைச் சாற்றையும் அதில் சேர்க்கவும். கொஞ்சம் கடுகு எண்ணெய் அதன் மீது ஊற்றி 2 நாட்கள் அப்படியே வைத்திருக்கவும், நடுநடுவே குலுக்கி வைக்கவும். காய்கறிகள் அந்த கலவையில் நன்கு ஊறிய பிறகு, இந்த ஊறுகாயை பயன்படுத்தலாம்.
The post மிக்ஸ்டு வெஜிடபிள் ஊறுகாய் appeared first on Dinakaran.