மிக வயதான மாரத்தான் வீரர் பவுஜா சிங் சாலை விபத்தில் பலி

7 hours ago 3

சண்டிகர்,

பஞ்சாபைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங் ஜலந்தர்-பதான் கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பியாஸ் கிராமத்தில் தனது வீட்டிற்கு வெளியே நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர், படுகாயங்களுடன் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். 'தலைப்பாகை சூறாவளி' என அழைக்கப்படும் பவுஜா சிங் மறைவு பல்வேறு தரப்பினரை சோகத்தில் ஆழ்த்தியது.

பவுஜா சிங் முழு சீக்கிய சமூகத்திற்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருந்தார் என சீக்கிய மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

89 வயதில் சாலை விபத்தில் மனைவியையும், மகனையும் இழந்த பிறகு அந்த துக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்காக மாரத்தான் ஓட தொடங்கி மக்களிடையே நம்பிக்கைக்கும், தைரியத்திற்கும் அடையாளமாக மாறினார் பவுஜா சிங்.

Read Entire Article