வேலூர், டிச.13: கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு சவகர் சிறுவர் மன்றம் மாணவ, மாணவியர்களை கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் 5 வயது முதல் 8 வயது வரை, 9 வயது முதல் 12 வயது வரை, 13 வயது முதல் 16 வயது வரை சிறார்களுக்கிடையே குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளில் மாவட்ட அளவில் கலைப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறுகின்ற மாணவ, மாணவியர்களுக்கு அரசின் சார்பில் பாராட்டுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்ட அளவிலான போட்டிகள், வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஊரிஸ் மேல்நிலைப் பள்ளியில் வரும் 15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 1 மணி வரை போட்டிகள் நடைபெறும். குரலிசைப் போட்டியில் முறையாக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும். சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. போட்டியாளர்கள் ஆதார் அட்டை நகல் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். மேலும் விவரகளுக்கு மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் என்ற முகவரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
The post மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் வரும் 15ம் தேதி நடக்கிறது கலெக்டர் தகவல் வேலூர் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் appeared first on Dinakaran.