மாற்றுத்திறனாளிகள் புகார் மனுக்களை ஏப்ரல் 30-க்குள் அனுப்ப வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

1 day ago 4

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தை எளிதில் அணுகும் படியாக சுற்று நீதிமன்றம் (Circuit Court) நடத்தப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மதியம் 3 மணி வரை 29.05.2025 மற்றும் 30.05.2025 ஆகிய இரண்டு நாட்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரால் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து முன்கூட்டியே பெறப்படும் மனுக்கள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 80(b)ன் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையருக்கு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்படின் அவற்றை தகுந்த அதிகார அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்ல இவ்வாணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குரிய பிரச்சனைகள் குறித்த புகார் மனுவினை மாற்றுத்திறனாளியோ அல்லது அவரது உறவினரோ அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கமோ அல்லது மாற்றுத்திறனாளிகளின் நலன் விரும்பிகளோ மாநில ஆணையத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்ளான மாநில ஆணையர் எண்:5 காமராஜர் சாலை, லேடி வெலிங்கடன் மகளிர் கல்லூரி வளாகம், சென்னை - 600005 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது [email protected] என்ற இணைய முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 30.04.2025-ம் தேதிக்குள் அனுப்புமாறும், மனுக்கள் தாக்கல் செய்வது குறித்த தகவல்களுக்கு 94499933236 என்ற தொலைபேசி எண்ணில் மாநில ஆணையரகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 80(b)ன் கீழ் விசாரிக்க தகுந்த கல்வி, வேலைவாய்பு மற்றும் அரசு சேவைகளில் சம வாய்ப்பு மறுத்தல், மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் மோசடி, வன்முறை மற்றும் சுரண்டல் போன்ற இன்னல்களில் பாதிக்கப்படுவது குறித்த புகார் மனுக்கல், நீதிமன்றத்தை அணுகுவதில் பொருளாதார பிரச்சனை காரணமாக் வழக்கறிஞர் உதவியை நாட இயலாதது குறித்த மனுக்கள், பாதுகாவலர் சான்று பெறுவதில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தாமதம் குறித்த புகார் மனுக்கள், கல்வி நிலையங்களில் சேர்க்கையின் போதும், சேர்ந்த பின்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த புகார்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகை பெறுவதில் தாமதம் குறித்த புகார் மனுக்கள் உயர்கல்வியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஐந்து சதவீத இடஒதுக்கீடு வழங்காமல் இருப்பது குறித்த மனுக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சொத்துரிமையை வழங்க மறுத்தல் (சொத்துரிமையை உரிய நீதிமன்றத்தின் மூலம் மீட்க தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படும்), மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மொழிப்பாட விலக்கு மற்றும் இன்னபிற சலுகைகள் மறுக்கப்படுதல் குறித்த புகார் மனுக்கள், மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு இலகுப்பணி/மாற்றுப்பணி வழங்க வேண்டிய சூழல் இருந்தும் இலகுப்பணி/மாற்றுப்பணி வழங்க மறுத்தல், மாற்றுத்திறனாளி பணியாளர் என்ற அடிப்படையில் பதவி உயர்வு மறுத்தல், பணியில் சேர்ந்த பின்பு மாற்றுத்திறனாளியான பணியாளர்களுக்கு தொடர்பணி வழங்க மறுத்தல் மற்றும் பதவியிறக்கம் செய்தல் குறித்த புகார் மனுக்கள், மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தங்களது சொந்த மாவட்டத்தில் பணியாற்ற கோரி காலியிடம் இருந்தும் வழங்க மறுத்தல், நிறுவனங்கள் சம வாய்ப்பு கொள்கை வெளியிடாமல் இருப்பது குறித்த புகார் மனுக்கள், அரசுத் துறைகள் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் அலுவலர் நியமிக்காமல் இருப்பது குறித்த மனுக்கள், மாதாந்திர உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்து கிடைக்காமல் இருப்பது, பெறப்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டது குறித்த புகார் மனுக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஓதுக்கீடு முறையாக பின்பற்றப்படாதது குறித்த புகார் மனுக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்களில் 5% இட ஒதுக்கீடு வழங்க மறுத்தல், பொது மக்கள் பயன்படுத்தும் கட்டிடங்கள் மற்றும் இணையதளங்களில் அனுகல் தன்மை இன்மை குறித்த புகார் மனுக்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படும் அரசு சாரா நிறுவனங்கள் 2016-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் செயல்படுவது குறித்த புகார் மனுக்கள், அரசு சாரா நிறுவனங்களால் நடத்தப்படும் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களில் குழந்தைகளை முறையாக கவனிக்காமல் துன்புறுத்துதல் குறித்த புகார் மனுக்கள், பயிற்சி பெற்ற பதிவு செய்த மறுவாழ்வு நிபுணர்கள் இல்லாமல் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் நடத்துதல், மாற்றுத்திறனாளியாக இல்லாமல்; மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை சட்டத்திற்கு புறம்பாக பெறுவது குறித்த புகார் மனுக்கள், குற்ற நிகழ்வுகள் குறித்து காவல் துறைக்கு புகாரளித்து நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்கள் குறித்த புகார்கள் (சிவில் பிரச்சனைகளுக்கு காவல் துறையை அணுகி நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போன்ற புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது) ஆகிய புகார் மனுக்களை அளிக்கலாம்.

மனுக்களானது மனுதாரரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், மனு குறித்த விரிவான விபரம், மனுவில் கோரப்படும் நிவாரணம் குறித்த தகவல், மனுதாரரின் கைரேகை அல்லது கையொப்பம், மனுவிற்கு சம்பந்தமான உரிய ஆவணங்கள் மற்றும் எதிர்மனுதாரர் குறித்த தகவல்கள் (அலுவலர் பெயர் மற்றும் முகவரி அஞ்சல் குறியீட்டுடன்) கடிதமாகவோ, பிரமாணப்பத்திரமாகவோ மேற்காணும் தகவல்களுடன் அமையப்பெற வேண்டும்.

ஏற்கனவே தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் முடிவு செய்யப்பட்ட வழக்குகள் அல்லது ஏற்கனவே தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சொத்து குறித்த புகார்கள், குடும்ப தகராறு குறித்த வழக்குகள், மாற்றுத்திறனாளிக்கும் தனியாரது பிரச்சனைக்கும் தொடர்பில்லாத மனுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச்சட்டம் 2016-ன் கீழ் பொருந்தாத வழக்குகள் குறித்து இவ்வாணையம் விசாரிக்க அதிகாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட ஆவணங்களுடன் தங்கள் புகார்களை மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்திற்கு அனுப்பி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article