மராட்டியம்: வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16.8 லட்சம் மோசடி

3 hours ago 3

மும்பை,

மராட்டிய மாநிலம் நவி மும்பையை சேர்ந்த 6 பேருக்கு கப்பல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக சில மோசடியாளர்கள் கூறினர். பின்னர் அவர்களை நம்ப வைக்க போலியான ஒப்பந்தங்கள் மற்றும் பத்திரங்களையும் காண்பித்தனர்.

இதனை முழுமையாக நம்பிய 6 பேர் ரூ.16.8 லட்சம் பணத்தை மோசடியாளர்களிடன் கொடுத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட மோசடியாளர்கள் வேலை தொடர்பாக செல்போன் அழைப்பு வரும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் வேலை தொடர்பாக தனக்கு அழைப்பு வரும் என நம்பியவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடி செய்த நபர்களை தேடி வருகின்றனர்.

Read Entire Article