சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ.1432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்றும் முதலமைச்சர் பேசி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளில் 493 மாற்றுத்திறனாளிகள் அரசுப்பணியை பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
The post மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ.1432 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.