டெல்லி: இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வஃக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. வக்ஃபு சட்டத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல், த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 16) வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மசோதாக்களை உச்சநீதிமன்ற தலைமையை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில்,
கோயில் நிர்வாகத்தில் இஸ்லாமியரை அனுமதிப்பீர்களா?
இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதோரை நிர்வாகிகளாக சேர்க்கலாமா?.வெளிப்படையாக பதில் கூற வேண்டும் என்று ஒன்றிய அரசு வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. நாங்கள் நீதிமன்ற இருக்கையில் அமரும் போது எந்த மதமும் எங்களுக்கு கிடையாது. அனைத்து தரப்பினரும் சமமே; எவ்வாறு இப்படி நீங்கள் ஒரு ஒப்பீட்டை கூற முடியும்?.
வக்ஃபு சட்ட வழக்கில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்
வஃக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. ஆலோசனை வழங்கும் குழுவில் வேறு மதத்தைச் சேர்ந்தவரை கோயில் நிர்வாக வாரியத்தில் உறுப்பினராக நியமிக்கலாமா?. வக்ஃபு வாரியத்தில் உறுப்பினர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும். ஆட்சியர் நடவடிக்கைகளைத் தொடரலாம், ஆனால் புதிய விதிகள் அமலுக்கு வராது.
வக்ஃபு சட்டத்துக்கு எதிரான வழக்கு நாளை ஒத்திவைப்பு
வக்ஃபு சட்டத்துக்கு எதிரான வழக்கை நாளை மதியம் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 20 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வக்ஃபு சட்டத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல், த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் நிறுத்திவைப்பு
வக்ஃபு வழக்கில் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் நாளை வரை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வக்ஃபு வாரியத்தில் 2 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தவிர மற்ற உறுப்பினர்கள் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தது.வக்ஃபு சொத்துகளை ஆட்சியர் வகைப்படுத்தலாம், ஆனால் நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.நாளை மதியம் விசாரணைக்கு பின்னர் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
The post இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.