சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதி காரம் அளிக்கும் முயற்சியை மேற் கொண்டுள்ளதற்காக முதல்வர் மு.க.ஸ் டாலினுக்கு அமர் சேவா சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசியல் பிரதிநிதித் துவம் அளித்து சமத்துவத்தை வளர்க் கும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் உருவாகும் என்றும் அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நடவடிக்கையால் ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றுத்திறனாளி பிரதிநிதிகளை நியமனம் செய்யப்படு வதன் மூலம் அதிகாரமளிப்பதுடன் அவர்களின் வளர்ச்சியை தமிழக அரசு கணிசமாக மேம்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் பலதரப்பட்ட திறமைகளில் இருந்து பயனடையும் சமூகத்தை உருவாக்கும் ஒரு மாற்றத் துக்கான நிகழ்வாக அமர் சேவா சங்கம் பார்க்கிறது.