
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயரை வைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் முதல்-அமைச்சர் அனுமதி பெற்று பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.