மார்ச் மாதத்தை குறிவைத்த நானியின் 'தி பாரடைஸ்'

2 hours ago 1

சென்னை,

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது நடிப்பில் வெளிவந்த 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா', 'தசரா' , 'ஹாய் நான்னா', 'சூர்யாவின் சனிக்கிழமை' ஆகிய திரைப்படங்கள் அமோக வெற்றியைப் பெற்றன.

தற்போது இயக்குனர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் 'ஹிட் 3' படத்தில் நானி நடித்து வருகிறார். சமீபத்தில் நானியின் 33-வது படத்தின் அறிவிப்பு வெளியானது. தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்குத் 'தி பாரடைஸ்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் நேற்று நடிகர் நானியின் பிறந்த நாளை முன்னிட்டு 'தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் மார்ச் மாதம் 3-ம் தேதி வெளியாக உள்ளது.

Euphoria on March 3rd. 2025. #THEPARADISE pic.twitter.com/0WdZFOvP01

— Nani (@NameisNani) February 24, 2025
Read Entire Article