மார்ச் 5-ல் அனைத்துக் கட்சி கூட்டம்: 45 கட்சிகளுக்கு அழைப்பு

4 hours ago 2

சென்னை,

மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று குற்றம்சாட்டி இருந்தார். மக்கள் தொகை கணக்குப்படி பார்த்தால் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 எம்.பி. தொகுதிகள் குறைந்துவிடும் என்றும் கூறி இருந்தார். நாடாளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்பதோடு தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படுவதாக அமைந்துவிடும் இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, நம் மாநிலத்தின் உரிமை சார்ந்தது என்றும் அவர் கூறி இருந்தார். தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கும் இந்த முக்கியமான பிரச்சினை குறித்து விஆதிக்க தேர்தல் கமிஷனில் பதிவு பெற்றுள்ள 45 கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை வருகிற 5-ம் தேதி தலைமைச்செயலகத்தில் கூட்டி உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.

இப்போது இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் 45 கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. அதில்,

1 திராவிட முன்னேற்றக் கழகம்

2 இந்திய தேசிய காங்கிரஸ்

3 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

4 இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)

5 இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

6 ம.தி.மு.க

7 விடுதலை சிறுத்தைகள் கட்சி

8 மனிதநேய மக்கள் கட்சி

9 அகில இந்திய பார்வர்டு பிளாக்

10 தமிழக வாழ்வுரிமை கட்சி

11 மக்கள் நீதி மய்யம்

12 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

13 ஆதி தமிழர் பேரவை

14 முக்குலத்தோர் புலிப்படை

15 மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

15 மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

17 அ.இ.அ.தி.மு.க

18 பாட்டாளி மக்கள் கட்சி

19 தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)

20 தேசிய முற்போக்கு திராவிட கழகம்

21 அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

22 பாரதிய ஜனதா கட்சி

23 தமிழக வெற்றிக் கழகம்

24 நாம் தமிழர் கட்சி

25 புதிய தமிழகம்

26 புரட்சி பாரதம் கட்சி

27 தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

28 புதிய நீதிக் கட்சி

29 இந்திய ஜனநாயகக் கட்சி

30 இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி

31 மனிதநேய ஜனநாயகக் கட்சி

32 இந்திய மக்கள் கல்வி .மு.க

33 பெருந்தலைவர் மக்கள் சுட்சி

34 அனைத்து இந்திய மூவேந்தர்.மு.க.

35 பசும்பொன் தேசிய கழகம்

36 அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லீமின்

37 தமிழக மக்கள் ஜனநாயககட்சி

38 கலப்பை மக்கள் இயக்கம்

39 பகுஜன் சமாஜ் கட்சி

40 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்-லெமினிஸ்ட் விடுதலை

41 ஆம் ஆத்மி கட்சி

42 சமதா கட்சி

43 தமிழ் புலிகள் கட்சி

44 கொங்கு இளைஞர் பேரவை

45 இந்திய குடியரசு கட்சி

ஒவ்வொரு கட்சிக்கும் அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article