மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய விடுமுறை நாட்களில் வருவாய்த்துறை இயங்கும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

7 hours ago 2

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சொத்துவரி, தொழில்வரி மற்றும் நிறுமவரி செலுத்துவதற்காகவும், தொழில் உரிமம் புதுப்பிப்பதற்காகவும் மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய விடுமுறை நாட்களில் வருவாய்த்துறை இயங்கும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டு 31.03.2025 அன்று முடிவடைவதன் காரணமாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில்வரி மற்றும் நிறுமவரி செலுத்துவதற்காகவும், தொழில் உரிமம் புதுப்பிப்பதற்காகவும், பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை வரும் 29.03.2025, 30.03.2025 மற்றும் 31.03.2025 ஆகிய விடுமுறை நாட்களிலும் இயங்கும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

The post மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய விடுமுறை நாட்களில் வருவாய்த்துறை இயங்கும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article