சென்னை: “வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் பணி நாளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்”, என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து,சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியவது: “வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக, வங்கிகளில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், வங்கிகளில் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் கோபம் அடைந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.