உடுமலை, மார்ச் 18: பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையத்தை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (72). இவரது மனைவி கடந்த மாதம் இறந்ததில் இருந்து, மன அழுத்தத்துடன் காணப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் திருஞானசம்பந்தம் காணாமல் போனார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை.இந்நிலையில், திருமூர்த்தி அணையில் நேற்று திருஞானசம்பந்தம் உடல் மிதந்தது. தளி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில், மனைவி இறந்த துக்கத்தில் அவர் காண்டூர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்ததும், உடல் அணைக்கு அடித்துவரப்பட்டதும் தெரியவந்தது. மகன் மகேஸ்வரசாமி புகாரின்பேரில், தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post காண்டூர் கால்வாயில் விழுந்து முதியவர் தற்கொலை appeared first on Dinakaran.