திருவனந்தபுரம் : வக்பு வாரிய மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது மசோதாவை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். மேலவையில் நடந்த விவாதத்தில் கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் ஒன்றிய அரசையும், பாஜவையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
வக்பு வாரியம் குறித்து ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு எதுவும் தெரியாது என்றும், இந்த மசோதா மூலம் முஸ்லிம்களை அழிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் கிறிஸ்தவர்களுக்காக பாஜ முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் கூறினார். இந்தநிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த பாஜ தொண்டர் சஜித் என்பவர் ஜான் பிரிட்டாசுக்கு பேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோழிக்கோடு மாவட்டம் சோம்பாலா போலீசார் பாஜ தொண்டர் சஜித் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
The post மார்க்சிஸ்ட் எம்பியை மிரட்டிய பாஜ தொண்டர் appeared first on Dinakaran.