கோவை, மே 23: கோடை விடுமுறையை முன்னிட்டு ஐதராபாத் – கொல்லம் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் நாளை (24ம் தேதி) முதல் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் வரும் ஜூன் 28ம் தேதி வரை இயக்கப்படும். அதன்படி, ஐதராபாத் ரயில் நிலையத்தில் இருந்து (வண்டி எண் 07193) ஐதராபாத் – கொல்லம் சிறப்பு ரயில் நாளை (24ம் தேதி) இரவு 11.10க்கு கிளம்பும். இந்த சிறப்பு ரயில் செக்கந்திராபாத், நலகோண்டா, குண்டூர், நெல்லூர், சிட்டூர், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, கோட்டையம், செங்கனூர், கயன்குளம், சஸ்தன்கோடா வழித்தடத்தில் கொல்லம் ரயில் நிலையத்தை வரும் 27ம் தேதி காலை 7.10 மணிக்கு சென்றடையும்.
அதேபோல், (வண்டி எண் 07193) கொல்லம் – ஐதராபாத் சிறப்பு ரயில் வரும் 26ம் தேதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வரும் ஜூன் 30ம் தேதி வரை இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் வரும் 26ம் தேதி கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்பட்டு சஸ்தன்கோடா, கயன்குளம், செங்கனூர், கோட்டையம், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சிட்டூர், நெல்லூர், குண்டூர், நலகோண்டா, செக்கந்திராபாத் வழித்தடத்தில் 27ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஐதராபாத்தில் ரயில் நிலையத்தை சென்றடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
The post மார்க்கெட்டில் பூக்கள் தேக்கம் கோவை போத்தனூர் வழித்தடத்தில் ஐதராபாத் – கொல்லம் சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.