பிப்ரவரி மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

3 hours ago 1

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே!

அமைதியான தோற்றமும் அலட்டிக் கொள்ளாத இயல்பான மனநிலையும் பிறரிடம் அன்பு செலுத்தக் கூடியவர் என்ற நற்பெயரையும் பெற்றவர்கள் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வுடன் கிடைத்துவிடும். நீங்கள் நினைத்திருந்த ஒரு காரியம் நிறைவேறும். வேலை விசயமாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள்,

வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத் தலைவிகள் சேர்த்து வைத்திருந்த பணத்தை தங்கள் பிள்ளைகளுக்காக வங்கி கணக்கில் ஒரு தொகையை டெபாசிட் செய்து விடுவர். அக்கம் பக்கம் விட்டாரிடம் நல்ல நட்புறவு நீடிக்கும்.

கலைஞர்கள் வெளியூர் சென்று வருவீர்கள். லொகேஷன் அல்லது படபிடிப்பிற்காக செல்ல வாய்ப்புண்டு.

மாணவ, மாணவிகளுக்கு கல்விச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கைகூடும். உடல் நலத்தில் அக்கறை தேவை. சிலருக்கு கண் பார்வை மங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மருத்துவ சிகிச்சை பெறுவர்.

பரிகாரம்

சனிக் கிழமை அன்று ஐயப்ப சாமிக்கு கருப்பு நிற ஆடையை சாத்துவது நல்லது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே!

வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற கொள்கையை கொண்டவர் நீங்கள். ஒரு முடிவு கிடைக்காமல் ஓய மாட்டீர்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு இது நாள்வரை தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த தங்கள் சக ஊழியரில் ஒருவர் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பர்.

வியாபாரிகளுக்கு ஏற்கனவே செய்து கொண்டிருந்த தொழிலுடன் மற்றொரு தொழிலையும் ஆரம்பிப்பர்.

குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் சொத்து விசயமாக நடந்து கொண்டிருந்த வழக்குகளில் சாதகமான தீர்வு ஏற்படும். கணவன் மனைவிக்குள் அன்பு நீடிக்கும். தாய் வழி உறவினர்கள் வந்து செல்வர்.

கலைஞர்களுக்கு, நீண்ட காலமாக வெளி வராமல் இருந்த படம் ரிலீசாகி அவர்களுக்கு நற்பெயரை ஈட்டித் தரும்.

மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களைப் பெற நன்கு படிப்பது நல்லது. நண்பர்களிடம் தங்கள் குடும்ப விசயத்தை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்

வெள்ளிக் கிழமை அன்று சப்த கன்னிகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபடுவது நல்லது.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே!

உங்களுக்கு கற்பனை வளம் இயற்கையாகவே மிகுதியாக அமைந்திருக்கும். கலைத்துறையில் ஜொலிப்பவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். வேலையை சரிசமமாக பிரித்துக் கொள்வர்.

வியாபாரிகளுக்கு செய்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் காண்பர். பண விசயத்தில் சற்று கடினமாக இருப்பது நல்லது. யாரையும் நம்பி பணம் கொடுக்க வேண்டாம்.

குடும்ப தலைவிகளுக்கு பண நடமாட்டம் அதிகரிக்கும். கணவன்–மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும்.

கலைஞர்களைப் பொருத்தவரை, பெண்கள் ஆண்களிடமும், ஆண்கள் பெண்களிடமும் அதிக நெருக்கம் வேண்டாம். தங்கள் இலக்கை நோக்கி பயணப்படுவது நல்லது.

மாணவ, மாணவிகள் படிப்பதற்கு தேவையான வசதியாக சில விசயங்களை பெற்றோர்கள் செய்து தருவர். பெண்களுக்கு தங்கள் உடல் நலத்தில் அக்கறை தேவை. சைனஸ் தொல்லை மற்றும் சளி தொந்தரவு வந்து நீங்கும்.

பரிகாரம்

சனிக் கிழமை அன்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே!

அனைத்து விசயங்களிலும் ஆர்வம் கொண்டவர் நீங்கள். பல்துறை வல்லுனர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்கள் அலைபேசியில் பேசியே புதுப் புது ஆர்டர்கள் எடுத்து அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள இலக்கினை இலக்கினை எட்டுவீர்கள். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். பணப் புழக்கம் மிகும்.

வியாபாரிகள் வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள். உங்கள் நாணயத்தால் வங்கி தங்களுக்கு மேலும் கடன் கொடுக்க முன்வரும்.

குடும்ப தலைவிகள், கணவரிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும்

கலைஞர்கள் முன்பணம் வாங்கிவிட்டு, பின்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது நல்லது.

மாணவ, மாணவிகளுக்கு நடனக் கலை மற்றும் கணினியில் அதிக ஆர்வம் உண்டாகும். இதற்கென்று சிறப்பு வகுப்புகளில் சேருவீர்கள். கல்விச் சுற்றுலா சென்று வருவீர்கள். உடல் நலத்தில் அசதி வந்து போகும்.

பரிகாரம்

வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவிப்பது நல்லது.

Read Entire Article