மாருதி சுசூகி நிறுவனம், கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. எக்ஸ்எல்எக்ஸ் 6 ல் ஜெட்டா, ஜெட்டா சிஎன்ஜி, அல்பா, ஜெட்டா ஏடி, அல்பா பிளஸ் உட்பட 7 வேரியண்ட்கள் உள்ளன. இதற்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சியாஸ் கார்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை சலுகை கிடைக்கும்.
பலேனா கார்களுக்கு ரொக்க தள்ளுபடி மற்றும் ஸ்கிராப் போனஸ் சேர்த்து ரூ.50,000 வரையிலும், பெட்ரோல் மேனுவல் மற்றும் சிஎன்ஜி வேரியண்டாக இருந்தால் ரூ.45,000 வரையிலும் சலுகை பெறலாம்.
மாருதி இக்னிஸ் காருக்கு ரூ.55,000 வரை சலுகை கிடைக்கும். ஏஎம்டி வேரியண்டாக இருந்தால் ரூ.60,000 வரை கிடைக்கும். பிரான்க்ஸ் டர்போ பெட்ரோல் வேரிண்டுக்கு ரூ.93,000 வரை சலுகை பெறலாம். இதில் ரொக்க தள்ளுபடி 35,000 ரூபாய், 43,000 மதிப்பிலான உதிரி பாகங்கள் கிட் , ஸ்கிராப் பலன்கள் ரூ.15,000 அல்லது எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ.10,000 அடங்கும்.
மாருதி ஜிம்னி வாகனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை ரொக்க தள்ளுபடி சலுகை கிடைக்கும். இதில் 4 வேரியண்ட்கள் உள்ளன.
மாருதி கிராண்ட் விட்டாராவுக்கு ரூ.1.15 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். மைல்ட் ஹைபிரிட் வேரியண்டுக்கு ரூ.95,000 வரையில் சலுகை பெறலாம். இதில் ரொக்க தள்ளுபடி ரூ.50,000, எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ.45,000 அடங்கம். ஸ்டிராங் ஹைபிரிட் வேரிண்டுக்கு அதிகபட்ச சலுகையாக ரூ.1.15 லட்சம் வரை கிடைக்கும். இதில் 12 வேரியண்ட்கள் உள்ளன.
மாருதி இன்விக்டோ காருக்கு ரூ.1.4 லட்சம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.25,000 ரொக்க தள்ளுபடி, ஸ்கிராப் சலுகை ரூ.1.15 லட்சம் அல்லது எக்ஸ்சேஞ்ச் சலுகை அடங்கும். இந்த மாத இறுதி வரை இந்த சலுகை கிடைக்கும். நகரம், டீலர்களுக்கு ஏற்ப சலுகைகள் மாறுபடலாம் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மாருதி சுசூகி கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடி சலுகை appeared first on Dinakaran.