''மாரி செல்வராஜின் வெற்றி, எங்கள் வீட்டின் வெற்றி'' - இயக்குனர் ராம்

1 day ago 2

சென்னை,

பான் இந்தியா இயக்குனராக மாறுவதற்கான எல்லா தகுதியும் மாரி செல்வராஜுக்கு உள்ளதாக இயக்குனர் ராம் கூறி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"மாரி செல்வராஜின் வெற்றி, எங்கள் வீட்டின் வெற்றி...எங்கள் குழுவின் வெற்றி...இது பத்தாது என்றுதான் கூறுவேன். அவரிடம் உள்ள கதைகளை வைத்து சொல்கிறேன், பான் இந்தியா இயக்குனராக மாறுவதற்கான எல்லா தகுதியும் அவருக்கு உண்டு.

படத்துக்கு படம் முன்னேறிக்கொண்டே இருக்கிறார். 'பரியேறும் பெருமாளை' விட 'வாழை' எனக்கு மிகவும் பிடித்தது. 'பைசன்' படத்தை பார்த்தேன். வாழையை விட அது எனக்கு ரொம்பவும் பிடித்தது" என்றார்.

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள படம், 'பறந்து போ'. கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் வருகிற 4-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது படக்குழு புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Read Entire Article