மாரடைப்பு காரணமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் மரணம்

3 months ago 13


புதுடெல்லி: பாலிவுட் பிரபலங்களின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரோஹித் பால் (63), நேற்று முன்தினம் திடீர் உடல் நலக்குறைவால் டெல்லி அஷ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ரோஹித் பாலின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் நகரில் பிறந்த ரோஹித் பால், கடந்த 1986ல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இந்திய பேஷன் டிசைனிங் துறையில் ஜாம்பவான்களில் ஒருவரானார். கடந்த 2006ல், இந்திய பேஷன் விருதுகளில் ஆண்டின் சிறந்த வடிவமைப்பாளர் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாரடைப்பு காரணமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் மரணம் appeared first on Dinakaran.

Read Entire Article