மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

5 hours ago 3

சென்னை: அதிக விளைச்சலால் இழப்பை சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். மேலும், நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களைப் போல மாம்பழங்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாங்காய் உற்பத்திக்கு நடப்பாண்டில் நியாயமான விலை கிடைக்காததாலும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிவடைந்துவிட்டதாக ஒதுங்கிக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினாலும் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

Read Entire Article