நாகர்கோவில், ஜன.19 : வெண்டலிக்கோடு அண்டூர் பொட்டகுழிவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (57). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர், விளவங்கோடு பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு விறகு லோடு கொண்டு சென்று கொண்டு இருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல், வாகனத்தை வழி மறித்தது. நீ விறகு லோடு கொண்டு செல்ல வேண்டும் என்றால் ரூ.50 ஆயிரம் எங்களுக்கு மாமூல் தர வேண்டும். இல்லையென்றால் மரம் கடத்துகிறாய் என கூறி வாட்ஸ் அப்பில் தகவல்களை பரப்பி விடுவோம் என கூறி மிரட்டினர். அப்போது நாகராஜ், தன்னிடம் பணம் இல்லை என கூறி உள்ளார். அப்போது அவரை செல்போனில் படம் பிடித்த கும்பல், திடீரென நாகராஜனை கன்னத்தில் அடித்துள்ளனர். டிப்பர் லாரியின் முன் பக்க கண்ணாடியை உடைத்தனர். இது குறித்து நாகராஜ், களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். இதில் குழித்துறை மடத்துவிளையை சேர்ந்த மணிக்குட்டன் என்ற கமல்ராஜ், சந்தோஷ் , குழித்துறை வாத்தியார்விளை வீடு பகுதியை சேர்ந்த பிஜூ என்பது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேர் மீதும், பி.என்.எஸ் சட்டப்பிரிவு 126 (2), 296 (பி), 115 (2), 351 (2) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post மாமூல் கொடுக்க மறுத்ததால் டிப்பர் லாரி கண்ணாடி உடைத்து டிரைவர் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.