மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான நிபந்தனைகளை பின்பற்றக: ஐகோர்ட் திட்டவட்டம்

3 hours ago 2

சென்னை: மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சமூகநீதி, சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு வரும் மே 11-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. பாமக சார்பில் மே 1 1 இல் நடக்கும் மாமல்லபுரம் மாநாட்டிற்கு தடை விதிக்கக் கோரி ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.மாலா மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர, மாநாட்டுக்கு 47 நிபந்தனைகளுடன் கடந்த 5ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பாமக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை விதித்துள்ள அத்தனை நிபந்தனைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படும். எந்த அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் மாநாடு நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநாட்டுக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்ற உத்தரவாத மனுவை வடக்கு மண்டல ஐஜியிடம் வழங்க வேண்டும். மாநாட்டுக்கு வருவோர் ஆயுதங்கள், வெடிபொருட்களை எடுத்து வரக் கூடாது. மாநாட்டின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரை பணியமர்த்த அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளை விதிக்கலாம் என அரசுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

The post மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான நிபந்தனைகளை பின்பற்றக: ஐகோர்ட் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article