தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,039-வது சதய விழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு விழா இன்று காலை 8.30 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்குகிறது. சதய விழா குழு தலைவர் து.செல்வம் வரவேற்கிறார். ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகிக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தொடக்க உரை நிகழ்த்துகிறார். பழநி ஆதீனம் குருமகா சன்னிதானம் சாது சண்முக அடிகளார் அருளுரை வழங்குகிறார்.