ஊட்டி, ஜன. 25: நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் இன்று (25ம் தேதி) நடக்க இருக்கும் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வு தொடர்பாக, பொது இடங்களில் சுத்தம் செய்தல் உட்பட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்டம் முழுவதும் மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நிகழ்வு நடைபெறும் நீர்நிலைகள், குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள், அரசு அலுவலகங்களில், நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது.
நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நெகிழி கழிவு சேகரிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.அனைத்து நகராட்சிகள், பேருராட்சிகள், உள்ளாட்சித்துறைகள், வனத்துறை, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், முதல்வரின் பசுமை தோழர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தேசிய பசுமை காவலர்கள் இணைந்து இத்தகைய மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நிகழ்வு தொடர்பாக பொது இடங்களில் சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடவுள்ளனர். மேலும், அனைத்து அரசு துறைகளும் இந்த மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நிகழ்வில், இணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும்/ இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு appeared first on Dinakaran.