ரோகேப்ரன் கேப்மார்டின்: மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் 2ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் அபாரமாக ஆடி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றினார். பிரான்ஸ் நாட்டின் ரோகேப்ரன் கேப்மார்டின் நகரில் ஆடவர்கள் மட்டும் பங்கு பெறும் மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் சாம்பியன் போட்டிகள் நடந்து வந்தன. இதன் இறுதிக் கட்டமாக நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலி வீரர் லோரென்ஸோ முஸெட்டி மோதினர்.
போட்டியின் முதல் செட்டை முஸெட்டி எளிதில் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்து அபாரமாக ஆடிய அல்காரஸ் அடுத்த இரு செட்களையும் வசப்படுத்தினார். அதனால், 3-6, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற அல்காரஸ் சாம்பியன் பட்டத்தையும் வெற்றிக் கோப்பையையும் கைப்பற்றினார். அவருக்கு, 1000 புள்ளிகளும், ரூ.9.2 கோடி பரிசுத் தொகையும் அளிக்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த முஸெட்டிக்கு 650 புள்ளிகளும், ரூ.5 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
The post மான்டே கார்லோ டென்னிஸ் அல்காரஸ் சாம்பியன்: ரூ.9 கோடி பரிசு வென்றார் appeared first on Dinakaran.