மான் வேட்டை பழிதீர்க்கும் விவகாரமாக மாறியதால் கைதி லாரன்சுக்கு உளவியல் சிகிச்சை அளிப்பேன்: சல்மான் கானின் மாஜி காதலி திடீர் பேட்டி

3 weeks ago 3

மும்பை: மான் வேட்டை பழிதீர்க்கும் விவகாரமாக மாறியதால் கைதி லாரன்சுக்கு உளவியல் சிகிச்சை அளிப்பேன் என்று சல்மான் கானின் மாஜி காதலி திடீர் பேட்டி அளித்துள்ளார். ராஜஸ்தானில் மான் வேட்டையாடிய விவகாரத்தில் சிக்கிய பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கும், சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் இடையிலான பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சல்மான் கானுக்கு லாரன்ஸ் கும்பலிடம் இருந்து பலமுறை கொலை மிரட்டல் வந்துள்ளதால், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சல்மான் கானின் நண்பரான முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின், இவ்விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சல்மான் கானின் முன்னாள் காதலி சோமி அலி அளித்த பேட்டியில், ‘பிஷ்னோய் சமூகத்தினருக்கும், அவர்கள் மான்களை கடவுளாக வழிபாடு செய்வதற்கும் உள்ள ெதாடர்பு சல்மான் கானுக்கு தெரியாது. அதுகுறித்து அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். லாரன்ஸ் ஒன்றும் குழந்தை அல்ல; அவர் மக்களை கொல்கிறார்; இதை ஏற்க முடியாது. வரும் நவம்பரில் லாரன்ஸை சந்தித்து பேச விரும்புகிறேன்; அவருடைய மூளையில் ஏற்பட்டுள்ள தவறான பதிவுகளை சரி செய்ய விரும்புகிறேன்.

அவருக்கு உளவியல் சிகிச்சை அளிப்பேன். தன்னை ஒரு கேங்க்ஸ்டர் என்று அழைத்துக் கொள்கிறார். சட்டம் படித்துள்ளார்; வழக்கறிஞராக பிரபலம் அடைய வேண்டியது தானே; தொலைகாட்சிகளில் டிஆர்பி வேண்டுமானால், வக்கீலாக மாறி டிஆர்பியை எடுங்கள்’ என்றார். கடந்த சில ஆண்டுக்கு முன் சல்மான் கானும், சோமி அலியும் காதலித்து வந்தனர். நடிகை ஐஸ்வர்யா ராய்க்காக சல்மான் கான் தன்னை விட்டு பிரிந்து சென்றதாக சோமி அலி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதன்பிறகு, பல சந்தர்ப்பங்களில் சல்மான் கான் மீது அவர் குற்றம் சாட்டினார். ஆனால் இப்போது லாரன்சிடம் பேச்சுவார்த்தை நடத்தி சல்மானுக்கு உதவ விரும்புவதாக சோமி அலி கூறியது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மான் வேட்டை பழிதீர்க்கும் விவகாரமாக மாறியதால் கைதி லாரன்சுக்கு உளவியல் சிகிச்சை அளிப்பேன்: சல்மான் கானின் மாஜி காதலி திடீர் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article