மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் ரேஷனில் அரிசி: புதுச்சேரி அதிமுக தீர்மானம்

3 months ago 9

புதுச்சேரி: மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் ரேஷனில் அரிசி மக்களுக்கு புதுச்சேரி அரசு தரவேண்டும் என அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

புதுவை மாநில அதிமுக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா 77வது பிறந்தநாளை மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி, பிறந்தநாளில் புதுவையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தல், ஏழை எளிய நடுத்தர மக்கள் நலனுக்காக நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும்.

Read Entire Article