மாநிலத்தின் உரிமைகளுக்காக ஓங்கி முழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சிகள் வெற்றியடையும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு

1 month ago 6

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞரால் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரை நூற்றாண்டுகாலம் ஆகிறது. ஐம்பது ஆண்டு காலத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார்.

அண்ணா, கலைஞர் ஆகியோரின் உயிர் மூச்சாக இருந்த மாநில சுயாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் தருவதற்கு குழு அமைத்திருக்கிற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தகுந்தது. வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது ஆகும். மாநில சுயாட்சி பற்றி ஆராயக் குழு அமைக்கப்பட்ட உடன் இன்றைக்கும் பாஜ, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் மீது பழி மொழிந்திருக்கிறது. அண்ணாவின் பெயரால் அமைந்திருக்கிற அதிமுக, பாஜவை வழி மொழிந்திருக்கிறது. இதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு மாநில உரிமைகளுக்கு ஓங்கி முழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிகள் வெற்றியடையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post மாநிலத்தின் உரிமைகளுக்காக ஓங்கி முழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சிகள் வெற்றியடையும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article