மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்துகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு!!

4 hours ago 2

சென்னை: மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்துகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் பேச்சைக் கேட்டு 41%-லிருந்து 40% ஆக பரிந்துரைக்க நிதிக்குழு முடிவெடுத்திருப்பதை ஏற்க முடியாது. சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இப்படியா நடத்துவது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை (50%) பல்வேறு மாநில அரசுகள் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளன. மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 40% ஆக குறைக்க நிதிக் குழு பரிந்துரைக்க உள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்துகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு!! appeared first on Dinakaran.

Read Entire Article