மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது மத்திய பட்ஜெட் - கனிமொழி எம்.பி.

2 hours ago 1

சென்னை,

மத்திய பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.  அவர் கூறியதாவது ,

ஆட்சி தொடர உறுதுணையாக இருக்கும் பீகாருக்கு நன்றிக்கடனாக பட்ஜெட். தெற்கில் இருக்கும் கூட்டணி ஆட்சிக்கு எதுவுமே செய்யவில்லை. ஆந்திராவுக்குக் கூட பட்ஜெட்டில் எதுவும் இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்குக்கூட வடக்கு-தெற்கு என பாகுபாடு.

மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது இந்த பட்ஜெட். தென் மாநிலங்களை பின்தங்கிய நிலைக்கு தள்ளும் அபாயம். வளர்ந்த மாநிலங்களை பின்தங்கிய நிலைக்கு மாற்றாதீர்கள். என தெரிவித்துள்ளார் . 

Read Entire Article