மாநில வரி பகிர்வை 50% ஆக உயர்த்த வேண்டும்: 16-வது நிதி ஆணைய குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

1 hour ago 1

சென்னை: மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு திட்​டங்​களுக்கு நிதிக் குழு ஓர் உச்சவரம்பை பரிந்​துரை செய்ய வேண்​டும். மத்திய வருவா​யில் மாநிலங்​களுக்கான வரிப் பகிர்​வின் பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்​டும் என்று 16-வது நிதி ஆணைய குழு​விடம் முதல்வர் ஸ்டா​லின் வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசின் 16-வது நிதி ஆணையத்​தின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமை​யில், அதன் உறுப்​பினர்கள் அடங்கிய குழு​வினர் 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளனர். இந்நிலை​யில், சென்னை கிண்​டி​யில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் முதல்வர் ஸ்டா​லின், அமைச்​சர்​கள், அரசு உயர் அதிகாரி​களுடன் நிதிக் குழு​வினர் நேற்று காலை ஆலோசனை நடத்​தினர். இதில் முதல்வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: சு​கா​தா​ரம், கல்வி, சமூகநலம், வேளாண்மை ஆகிய துறை​களின் முன்னேற்​றத்​துக்கான முக்கிய திட்​டங்​களை, பெரும்​பாலும் மாநில அரசுகள்​தான் வடிவ​மைத்து செயல்​படுத்து​கின்றன. ஆனால், அதற்​கேற்ற வருவாயை பெருக்கு​வதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் குறைவாகவே உள்ளன.

Read Entire Article