மாநில யோகா போட்டி சிறுவர், சிறுமியர் அசத்தல்

4 months ago 14

 

மதுரை, பிப். 23: மதுரையில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டியில், சிறுவர், சிறுமியர் தங்கள் திறமைகளை உற்சாகமாக வெளிப்படுத்தினர். மதுரை, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில், மாநில அளவிலான யோகா போட்டி நேற்று நடந்தது. துவக்க விழாவிற்கு யோகா சங்க சேர்மன் மூவேந்திரன் தலைமை வகித்தார். தலைவர் செந்தில்குமார், செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். இதில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டிகளை அடிமாஸ் முத்து துவக்கி வைத்தார். ஒரு வீரர் விருச்சிக ஆசனம், சலாராசனம், சக்ராசனம், சிரசாசனம் மற்றும் ஏகாதா ஆசனம் உள்பட 5 ஆசனங்களை செய்ய வேண்டும். ஒரு ஆசனத்திற்கு 10 மதிப்பெண் வீதம் 50 மதிப்பெண் வழங்கப்படும். இதன் மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். போட்டியின் முடிவில், எஸ்.சஞ்சீவ்அரியா, எஸ்.மகாலட்சுமி, ஆர்.ஆத்விக்கா, ஜெய்னிவேகன், ஆதர்ஷ். ஜெபினாரீமாஸ், கே.தக்ஷிணமீனா, எஸ்.தமிழினி ஆகியோர் பரிசுகளை வென்றனர்.

The post மாநில யோகா போட்டி சிறுவர், சிறுமியர் அசத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article