சென்னை: மாநில திட்டக்குழு சார்பில் தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 தயாரிக்கப்பட்டுள்ளது. இதனின் சிறப்பம்சங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
“இந்தியாவின் மக்கள்தொகையில் 6% மட்டுமே கொண்டிருக்கும் தமிழ்நாடு 2023-24-ஆம் ஆண்டில் GDP-யில் 9.21 பங்களித்துள்ளது.
மோட்டார் வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, தோல்பொருட்கள் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதியாளர் தமிழ்நாடு.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது மாநிலம் முழுவதுமுள்ள நகப்புற மையங்களில் பரவலாக்கப்பட்டுள்ளது.
வணிக வங்கிகள் வழங்கும் வேளாண் கடனில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
2024 உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ. 6.64 லட்சம் முதலீடுகள். இதன் மூலம் 14.55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பு.
சமூக முன்னேற்றக் குறியீடு (SPI) & உயர்கல்வி சேர்க்கை விகிதம் (GRE) ஆகியவற்றில் தமிழ்நாடு முதலிடம். குறைவான குழந்தை இறப்பு விகிதம், குறைந்த வறுமை நிலைகள் ஆகியவற்றில் இரண்டாம் இடம். நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) குறியீட்டில் மூன்றாம் இடம்.
தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை உருவாக்கி, காலநிலை மாறுபாடுகளின் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முன்கூட்டியே தயாராகும் அணுகுமுறை” என பதிவிட்டுள்ளார்.
The post மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை சிறப்பம்சங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.