மாநகராட்சி சார்பில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

3 months ago 9

திருச்சி, பிப்.11: திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த, தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமில், மாநகர மேயர் அன்பழகன், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை நேற்று வழங்கினார். திருச்சி மாநகராட்சி சார்பில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் ஒன்று முதல் 19 வயது வரையிலான அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. திருச்சி மாநகராட்சி பகுதியிலுள்ள அங்கன்வாடி மையங்கள் வாயிலாக, ஒன்று முதல் 5 வயது வரையிலான 40 ஆயிரத்து 990 குழந்தைகளுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 6 முதல் 19 வயது வரையிலான 2 லட்சத்து 10 ஆயிரத்து 116 மாணாக்கர்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

20 வயது முதல் 30 வயதுடைய கருவுறாத, தாய்ப்பால் ஊட்டாத பெண்கள் 68 ஆயிரத்து 928 பெண்களுக்கும் இம்மாத்திரை வழங்கப்படுகிறது. திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 295 அங்கன்வாடி மையங்களிலும், 380 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் மற்றும் 31 அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. எனவே, ஒன்று முதல் 19 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய கருவுறாத, தாய்ப்பால் ஊட்டாத பெண்களும் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் விஜயலெட்சுமி, மாநகர நல அலுவலர் விஜய்சந்திரன், சுகாதார அலுவலர் இளங்கோவன் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி சார்பில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் appeared first on Dinakaran.

Read Entire Article