தஞ்சாவூர், ஏப்2: தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே மாநகராட்சி சார்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாநகராட்சி உட்பட்ட பகுதியில் தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சை பெரிய கோவில் எதிரே சாலை குண்டும் குழியுமாக இருந்தது. தஞ்சை பெரிய கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும் மே மாதம் தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து தஞ்சை பெரிய கோயில் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தஞ்சை பெரிய கோயிலுக்கு வெளி மவட்டம் வெளி மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிக அளவில் இருக்கும். மேலும் தஞ்சை பெரிய கோயில் சாலை கொண்டும் குழியுமாக இருப்பதால் அந்த வழியாக வாகனங்களை ஓட்டி வருபவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். எனவே அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து தஞ்சை மாநகராட்சி சார்பாக தஞ்சை பெரிய கோவில் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த சாலை சீரமைக்கும் பணியை தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று காலை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் கண்ணன், நகர பொறியாளர் மோகன், உதவி பொறியாளர் மனோகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
The post மாநகராட்சி சார்பில் பெரிய கோயில் அருகே சாலை சீரமைப்பு பணி appeared first on Dinakaran.