மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு ஒரேநாளில் 6120 அழைப்புகள்: மாநகராட்சி தகவல்

1 month ago 5

சென்னை, அக்.17: வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டது. அதன்படி, மழையில் மாநகராட்சி பகுதிகளில் சாய்ந்த 64 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 200 பேர் வரை தங்கும் வகையில் 300 இடங்களில் அடிப்படை வசதிகளுடன் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 98 மைய சமையல் கூடங்கள் வாயிலாக உணவு சமைத்து வழங்கப்படுகிறது. கடந்த 2 தினங்களில் காலை வரை 7 லட்சத்து 18 ஆயிரத்து 885 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

நீர்தேங்கியுள்ள 130 இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. மழைநீரை வெளியேற்ற பல்வேறு திறன் கொண்ட 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிமாவட்டங்களிலிருந்து 303 மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 6120 அழைப்புகள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது திடக்கழிவு மேலாண்மை பணிகளை 15,000க்கும் மேற்பட்ட தூய்மை ப்பணியாளர்கள் மேற்கொண்டு வரும் நிலையில் மேலும் பிற மாவட்டங்களிலிருந்து கூடுதலாக 500 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிக்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது. பொது சுகாதாரத் துறையின் சார்பில் சென்னையில் நாள்தோறும் 100 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

The post மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு ஒரேநாளில் 6120 அழைப்புகள்: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article